Amit Shah chennai visit: சென்னை வரும் அமித் ஷாவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
Amit Shah chennai visit: சென்னை வரும் அமித் ஷாவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
Published on: April 5, 2025 at 9:40 pm
சென்னை ஏப்ரல் 5 2025: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2025 ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை வருகிறார். அப்போது அவரை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இந்த ஆலோசனை ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் குறித்த தேர்வு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
மாநிலத் தலைவர் பதவிக்கு நைனார் நாகேந்திரன் காய் நகர்த்துவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கட்சியின் தற்போதைய மாநில தலைவர் கு அண்ணாமலை, ” மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை” என்றார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அண்ணாமலையை பொருத்தமட்டில் அவர் அதிரடியாக அரசியலில் ஈடுபட்டார்.
குறிப்பாக திமுகவினர் செய்யும் குற்றங்களை ஆதாரத்துடன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும் சரியான எதிர் கட்சி போல் செயல்படுவதாகவும்; அவரை மாற்றக்கூடாது என்றும் கட்சியில் சலசலப்புக்கள் தற்போது கேட்கத் தொடங்கி விட்டன. இதற்கிடையில் மாநிலத் தலைவர் மாற்றப்பட மாட்டார்; மாநிலத் தலைவரை மாற்றப் போவதாக யார் கூறினார்கள்? கட்சியின் தலைவர் ஜெயபிரகாஷ் நட்டா இது குறித்து ஏதேனும் பேசினாரா? என அதிரடியாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, கட்சி நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித் சாவுடன் கலந்துரையாட உள்ளனர் என்ற செய்திகள் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஆதரவு ஏன்? ஜே.டி.யூ பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com