சென்னை, ஏப்ரல் 5 2025: சென்னை, சேப்பாக்கத்தில் உள்ளஎம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஜாக் பிராசர் மெக் கூர்க் பூஜ்ஜிய ரன்னில் பெவிலியன் திரும்பினார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை அப்பளம் போல் நொறுக்கினார். இவர் 51 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்ஸர் 6 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த நிலையில் அபிஷேக் போரல் 33 ஓட்டங்களும் (1 சிக்ஸர் நாலு பவுண்டரி), அக்ச்சர் பட்டேல் 21 ரன்னும் (1 சிக்ஸர் 2 பவுண்டரி), சமீர் ரிஸ்வி 20 ரன்னும், திரிஸ்டன் டப்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.
இதனால் டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வகிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் கலீல் அகமது இரண்டு விக்கட்டும், ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது, மதிஷா பத்திரண்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திர 3 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் தேவோன் கான்வென்ட் 13 ரன்னில் நடையை கட்டினார்.
கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ஐந்து ரன்னில் கை வீசினார். எனினும் மறுபுறம் விஜய் சங்கர் நின்று நிதானமாக ஆடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சை நொறுக்கினார்.
விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் குவித்து இருந்தார். இதில் ஒரு சிக்சர் ஐந்து பவுண்டரிகள் அடங்கும்.
இந்த நிலையில் சிவம் துபை, தன் பங்குக்கு 18 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னும், மகேந்திர சிங் தோனி அவுட் ஆகாமல் 30 ரன்னும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதரப்பில் மிச்சல் ஸ்டாக், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். விப்ராஜ் நிகம் இரு விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
இதையும் படிங்க: KKR vs MI : சொந்த மண்ணில் உறுமிய மும்பை.. அடங்கிப்போன கொல்கத்தா!
Tamil News Live Updates July 14 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Tamil News Live Updates July 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Dr Anbumani Ramadoss : ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்; முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித்…
Chennai freight train fire: சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்,…
Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்….
Kerala nurse Nimisha Priya: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16 2025 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு அறிவித்துள்ளது பெரும் சோகத்தை…