உத்தர பிரதேசத்தில் சிறுமி தற்கொலை முயற்சிக்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் சிறுமி தற்கொலை முயற்சிக்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on: December 1, 2024 at 12:05 pm
UP Teen Girl sexually assaulted | உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் 17 வயது சிறுமி, ஒருவர் கடந்த மாதம் 23-ந்தேதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை 2 நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இந்த செயலை வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்து வெளியில் கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் கழிவறையில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டார். சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க கர்நாடகா – கேரளா இடையே சிறப்பு ரயில் ; ஐயப்ப பக்தர்கள் நோட் பண்ணுங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com