Sanjay Raut : ராகுல் காந்தியின் பேச்சை மம்தா பானர்ஜி கேட்டிருக்க வேண்டும் என சிவசேனா (உத்தவ்) நிர்வாகி சஞ்சய் ராவத் கூறினார். மேலும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் திருடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
Sanjay Raut : ராகுல் காந்தியின் பேச்சை மம்தா பானர்ஜி கேட்டிருக்க வேண்டும் என சிவசேனா (உத்தவ்) நிர்வாகி சஞ்சய் ராவத் கூறினார். மேலும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் திருடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

Published on: May 5, 2026 at 5:48 pm
மும்பை, மே 5, 2026: நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.
பாகிஸ்தானில்தான்..
அப்போது பேசிய அவர், “இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல என்றே நான் கருதுகிறேன். இது நிச்சயமாக பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கும் கிடைத்த வெற்றியாகும். மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களில் நிகழ்ந்தது போலவே, இங்கும் ‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்’ (எஸ்.ஐ.ஆர்) வாயிலாக லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன; அதன் விளைவாக, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கவில்லை.
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11 லட்சமாக உள்ளது. இந்நிலையில், 9 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இத்தகைய தேர்தல் முறையை நான் பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் மட்டுமே கண்டிருக்கிறேன்“ என்றார்.
ராகுல் பேச்சை..
#WATCH | Mumbai, Maharashtra: Shiv Sena (UBT) leader Sanjay Raut says, "This is a grave crime by Mamata Didi that she did not listen to Rahul Gandhi. If Mamata Didi had sat down with Rahul Gandhi and discussed the matter, the results would have been different. What Rahul Gandhi… pic.twitter.com/ZGYQTaYLfD
— ANI (@ANI) May 5, 2026
தொடர்ந்து பேசிய சஞ்சய் ராவத், “ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்காதது மம்தா தீதி இழைத்த ஒரு மிகக் கொடிய குற்றமாகும். மம்தா தீதி ராகுல் காந்தியுடன் அமர்ந்து இவ்விஷயம் குறித்து விவாதித்திருந்தால், விளைவுகள் வேறாக அமைந்திருக்கும்.
ராகுல் காந்தி கூறியது தற்போது உண்மையாகிவிட்டது. அவர் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள் திருடப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ இளைஞர்கள் காரணம்.. சித்த ராமையா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com