கொஞ்சம் மாத்திக்கிட்டா போதும்; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதை ஃபாலோ பண்ணுங்க!

Health | காலை எழுந்தவுடன் செய்யக்கூடிய ஐந்து ஆரோக்கியமான வழிமுறைகள் இங்கு உள்ளன.

Published on: December 1, 2024 at 11:41 am

Health | காலை எழுந்தவுடன் பல் துவக்கி காலை உணவை எடுத்துக்கொண்டு படிப்பு அல்லது வேலை என்று தினசரி வாழ்க்கை தொடங்குகிறது. இவ்வாறு தொடங்கக்கூடிய வாழ்க்கை முறையில் சில சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்வதுடன் நாள் முழுவதும் புத்துணர்ச்சியும் கொடுக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடிய ஐந்து நல்ல ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி சித்த மருத்துவர் டாக்டர் சர்மிகா பகிர்ந்துள்ளார். அந்த ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

ஆயில் புல்லிங்

காலையில் தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். நல்லெண்ணையை பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்வது மிகவும் சிறந்தது.

வெதுவெதுப்பான தண்ணீர்

5 Morning things You Should do To Reduce Belly Fat

காலை எழுந்து பற்களை சுத்தம் செய்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். இது ஒரு நல்ல டீடாக்ஸாக இருக்கும்.

பல்பொடி

இந்த காலத்தில் அனேகமான மக்கள் பற்களை சுத்தம் செய்ய பேஸ்ட் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. பேஸ்டுக்கு பதிலாக பல்பொடியை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்வதன் மூலம் பல் மற்றும் ஈர்கள் மிகவும் வலிமை அடைகிறது.

நாள்பார்மராதி ஆயில்

வறண்ட சருமத்தை உடையவர்கள் மட்டும் இந்த எண்ணெய் பயன்படுத்தலாம். குளிக்கச் செல்லும் முன் 20 நிமிடத்திற்கு முன்னர் முகத்தில் ஃபேஸ் மசாஜ் இரண்டு நிமிடம் செய்து 20 நிமிடத்திற்கு பின்னர் முல்தானி மட்டி, பாசி பயிர் மாவு, கடலை மாவு, நலங்கு மாவு போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை முகத்தில் பூசி முகம் கழுவுதல் சிறந்தது.

உடற்பயிற்சி

5 Morning things You Should do To Reduce Belly Fat

தினமும் காலையில் 15 நிமிடம் ஏதேனும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 15 நிமிடம் வரை கட்டாயம் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியதாக அமையும். உடற்பயிற்சியை 15 நிமிடத்தில் தொடங்கி 2 மணி நேரம் வரை நீடிக்கலாம்.

தினசரி வாழ்க்கை முறையில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம். இந்த ஐந்து நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏற்றவாறு காலையில் வழக்கம்போல் படுக்கையில் இருந்து எழுவதை விட முன்னரே எழுந்து பின்பற்ற தொடங்கினால் சிறப்பாக இருக்கும்.

இதையும் படிங்க : ஆஸ்துமா பிரச்னையா? இந்த 5 உணவுகளை மறக்காதீங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com