Telangana | தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்சசையாகின. இவர் நடிகர் நாகசைதன்யா, சமந்தா காதல் திருமணம் விவாகரத்து குறித்து பேசினார். அப்போது இதற்கு காரணம் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்றார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் சுரேகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி, தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் சுரேகா, “பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி ராமா ராவ் நடிகைகளின் போன்களை ஒட்டுக்கேட்பார். பின்னர் அவர்களின் பலவீனங்களை கண்டறிந்து பிளாக்மெயில் செய்வார். நடிகை சமந்தா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. இது நாக சைதன்யா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்திலும் சமந்தா பெயரை இழுத்துப் பேசி இருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் முன்னணி நடிகர்கள் ஆவார்கள். மேலும், தெலுங்கு திரையுலகில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமான அக்கினேனியை சேர்ந்தவர் நாக சைதன்யா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Rahul Gandhi: 50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா; இது அவருக்கு எப்படி தெரியும்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்….
காங்கிரஸ், தி.மு.க அங்கம் வகிக்கும், இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்….
Rahul gandhi: வாக்கு திருட்டு என தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் பரப்புரை அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது….
Congress MP Shashi Tharoor: நாட்டின் துணை ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு காங்கிரஸின் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பதிலளித்தார்….
Tamil News Highlights June 19 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்