புதுச்சேரி பிப்ரவரி 3, 2026; புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது; இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான நாராயணசாமி, ” புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது; இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்றார்.
புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், திமுக கூட்டணி பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதே நேரம் இக்கூட்டத்தில், தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் கலந்து கொண்டன.
காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாதது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியிலும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தரப்பு மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை; இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க; புழல்- தாம்பரம் சாலையில் ஆட்டோ ரேஸ்.. 3 ஆட்டோ, 3 பைக் பறிமுதல்.. 11பேரை தட்டித் தூக்கிய போலீஸ்
CM Vijay: 224 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியத்தை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார்….
Jailer 2 Box Office Collection: ரூ.812 கோடியை வசூலித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம்….
Arikomban: நடிகரும் இயக்குநருமான மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அரிகொம்பன்’….
Daredevil: அஜித்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பார்த்திபன்; ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது….
Sai Pallavi: சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது என நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்….
Pa. Ranjith: பொங்கல் 2027-ல் வெளியாகிறது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ திரைப்படம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்