சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு; ஜில்ஜில் ஆகப்போகும் 20 மாவட்டங்கள்!

RMC Chennai | Rain Alret | சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 3, 2024 at 12:06 pm

RMC Chennai | Rain Alret | தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (செப்.3, 2024) பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

05.10.2024

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை
பெய்யவாய்ப்புள்ளது.

06.10.2024

தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.10.2024 மற்றும் 08.10.2024

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானிலை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28′ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று ம மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

45 02.10.2024 முதல் 04.10.2024 வரை

வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் ல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

ஆக்ஸிஸ் புதிய மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம்.. முழு விவரம்! Axis Nifty50 Equal Weight Fund

ஆக்ஸிஸ் புதிய மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம்.. முழு விவரம்!

Axis Nifty50 Equal Weight Fund : ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது….

முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை.. மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் 40% சரிவு ஏன்? Investor caution

முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை.. மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் 40% சரிவு ஏன்?

Investor caution : மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன….

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.1.59 லட்சம் ரிட்டன்.. எஸ்.பி.ஐ டாப் மியூச்சுவல் ஃபண்ட் Investor caution

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.1.59 லட்சம் ரிட்டன்.. எஸ்.பி.ஐ டாப் மியூச்சுவல் ஃபண்ட்

Top 3 cheapest SBI mutual funds : கடந்த காலங்களில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….

25 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தெரியுமா? 25% Return Funds

25 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தெரியுமா?

25% Return Funds : கடந்த ஓராண்டில் 25 சதவீதம் வரை ரிட்டன் வழங்கிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….

ரூ.10 கோடி இலக்கு.. 20 வயதில் எவ்வளவு எஸ்.ஐ.பி முதலீடு தேவை? ஓர் பார்வை! Mutual Fund

ரூ.10 கோடி இலக்கு.. 20 வயதில் எவ்வளவு எஸ்.ஐ.பி முதலீடு தேவை? ஓர்

Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், 20 வயதான முதலீட்டாளர்கள் ரூ.10 கோடிகள் வரை திரட்ட எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com