SC and ST Quotas: “பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்களின் பின்தங்கிய நிலை, பொருளாதார அடிப்படையிலானது அல்ல, வரலாற்று ரீதியான சமூக பின்தங்கிய நிலை” என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது.
SC and ST Quotas: “பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்களின் பின்தங்கிய நிலை, பொருளாதார அடிப்படையிலானது அல்ல, வரலாற்று ரீதியான சமூக பின்தங்கிய நிலை” என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது.

Published on: August 10, 2026 at 6:34 pm
புதுடெல்லி, ஆக.10, 2026: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பட்டியல் சாதியினர் (SCs) மற்றும் பழங்குடியினருக்கான (STs) இட ஒதுக்கீட்டில் ‘கிரீமி லேயர்’ என்ற கருத்து பொருந்தாது என்று தெளிவாக தெரிவித்துள்ளது. இவர்களின் பின்தங்கிய நிலை, பொருளாதார அடிப்படையிலானது அல்ல, வரலாற்று ரீதியான சமூக பின்தங்கிய நிலை என்பதால், அதனை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என வாதிட்டுள்ளது.
மத்திய அரசின் நிலைப்பாடு
பட்டியல்/பழங்குடி சமூகங்களின் பின்தங்கிய நிலை, வரலாற்று ரீதியாக ஏற்பட்ட சமூக, கல்வி, அரசியல் பின்தங்கிய நிலையாக பார்க்கப்பட வேண்டும். மேலும், இது வெறும் வருமான அடிப்படையிலான பின்தங்கிய நிலைக்கு ஒப்பாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுருங்கச் சொல்வது என்றால் இந்த கிரீமி லேயர் கருத்து, இதர பிற்படுத்தப்பட்ட ஓ.பி.சி பிரிவில் உள்ள சமூகங்களுக்கு பொருந்தும்; ஆனால் எஸ்.சி/எஸ்.டி பிரிவில் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டு கொள்கை மாற்றம்?
மேலும், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும்; நீதிமன்றம் அதனை மாற்ற முடியாது என மத்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த மனுவை தாக்கல் செய்தவர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆவார். பா.ஜ.க பிரமுகரான இவர், வழக்குரைஞராக திகழ்கிறார். இவர் அளித்துள்ள மனுவில், எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளில் வசதியான குடும்பங்கள் இட ஒதுக்கீட்டுப் பலன்களை ஏகபோகமாக்குகின்றன; இதனால் மிகவும் விளிம்புநிலையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்குகின்றனர்” என வாதிட்டுள்ளார். இதுமட்டுமின்றி அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கும் வருமான அடிப்படையிலான முன்னுரிமைகளை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் எதிர்ப்பு
எஸ்.சி/எஸ்.டி சமூகங்களின் பின்தங்கிய நிலை வருமான அடிப்படையிலானது அல்ல; சமூக, வரலாற்று, கல்வி பின்தங்கிய நிலை என மத்திய அரசு இந்த மனுவுக்கு எதிராக வாதிட்டுள்ளது. மேலும், கிரீமி லேயர் எஸ்.சி/எஸ்.டி பிரிவில் அறிமுகப்படுத்துவது தவறானது; ஏனெனில் இவர்களின் பின்தங்கிய நிலை அடிப்படை மற்றும் வரலாற்று ரீதியிலானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான விளக்கம்
இதர பிற்படுத்தப்பட்ட சமூகமான ஓ.பி.சி பிரிவில் கிரீமி லேயர் 1992 ஆம் ஆண்டு இந்திரா சாவ்னே வழக்கின் மூலமாக அமலுக்கு வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஓ.பி.சி பிரிவில் கிரீமி லேயர் பொருந்தும் என்று தீர்மானித்தது. எனினும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவில் கிரீமி லேயர் பொருந்தாது; ஏனெனில் இவர்களின் பின்தங்கிய நிலை அடிப்படை பாகுபாடு காரணமாக ஏற்பட்டதாகும்.
மனுவின் சமூக விளைவுகள்
இந்த மனுவின் வாதம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுகளில் மேட்டுக்குடி ஆதிக்கம் உருவாகிறது; மிகவும் பின்தங்கியவர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது, எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது இல்லையா என்பது முக்கியமான சட்ட, சமூக விவாதமாக மாறும்.
எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தெளிவாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது; இதனால், எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பொருந்தாது என்ற நிலை தொடர வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு; நீதிமன்றம் அதனை மாற்ற முடியாது என்ற நிலைப்பாடும் வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. நீர் பீய்ச்சி அடித்து விரட்டியடிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com