Uttarakhand Bus Accident | உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து பவுரியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
Uttarakhand Bus Accident | உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து பவுரியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
Published on: November 4, 2024 at 1:19 pm
Uttarakhand Bus Accident | உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 23 பயணிகள் உயிரிழந்தனர். 15 பேர் உடலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில், 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பேருந்து பவுரியில் இருந்து ராம்நகருக்கு சென்று கொண்டிருந்த போது அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்தில் விபத்து நடந்ததாக மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே தெரிவித்தார்.
மேலும், 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்தபோது அதில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். சம்பவ பகுதியில் போலீசார் மற்றும் மாநில பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், “நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; 2 வீரர்கள் மாயம்!!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com