Health | பசு நெய் மற்றும் எருமை நெய் வேறுபாடு மற்றும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
Health | பசு நெய் மற்றும் எருமை நெய் வேறுபாடு மற்றும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
Published on: November 4, 2024 at 1:15 pm
Health | அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய உணவு வகைகள் ஒன்று நெய். பசு நெய் அல்லது வெண்ணெய் ஆரோக்கியத்திற்காக மற்றும் சுவைக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரமாக நெய் அமைந்துள்ளது. பசு நெய் மற்றும் எருமை நெய் ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளது. பசு நெய் மற்றும் எருமை நெய்யில் உள்ள வேறுபாடுகள் மற்றும் பலன்களைப் பற்றி பார்க்கலாம்.
பசு நெய்
பசு நெய் பசுவின் பாலில் இருந்து பெறப்படுகிறது. பசும் பாலின் ஆடைகளை சேகரித்து அவற்றிலிருந்து பெறப்படும் நெய்யானது 62 முதல் 65 சதவீதம் கொழுப்பைக் கொண்டுள்ளது. இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே2 ஆகியவை நிறைந்துள்ளது. இதன் முக்கிய கூறுகளில் ஒன்று பிட்யூட்டரி அமிலம் ஆகும். இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளையும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
எருமை நெய்
பசு நெய் போலவே எருமை நெய்யும் எருமை பாலில் கிடைக்கக்கூடிய பால் ஆடை, கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. எருமை நெய் அதிக கொழுப்பை உள்ளடக்கியது. இதில் சுமார் 80 முதல் 85 சதவீதம் கொழுப்பு நிறைந்துள்ளது. இது பசு நெய் விட செழுமையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். இந்த நெய் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களால் நிறைந்துள்ளது.
ஆனால் இதில் பசு நெய்யை விட குறைந்த அளவு வைட்டமின் ஏ உள்ளது. எருமை நெய்யில் அதிக கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகள் இருப்பதால் அதிக கலோரி தேவை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். பசு நெய் லேசான, சத்தான, சுவை மற்றும் ஒரு இனிமையான நறுமணத்தை கொண்டுள்ளது. பசு நெய்யின் சுவை மற்றும் மனம் பசுவின் இனம் மற்றும் அதன் உணவை பொருத்து மாறுபடும். பசு நெய் உடன் ஒப்பிடும்போது எருமை நெய் வலுவான சுவை மற்றும் நறுமணத்தை கொண்டுள்ளது.
பசு நெய்யின் நன்மைகள்
பசு நெய் ஆரோக்கியமான செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வருகிறது. மேலும் ஆக்சிஜனேற்றம் உள்ளடக்கம் காரணமாக நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்திகிறது. பசு நெய்யில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
எருமை நெய்யின் நன்மைகள்
எருமை நெய் அதிக கலோரி தேவைப்படுபவர்களுக்கு ஏற்றது. பசு நெய் போலவே எருமை நெய்யும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது பெரும்பாலும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சமையல் பயன்பாடு
பசு நெய் மற்றும் எருமை நெய் இரண்டுமே தனித்துவமான குணாதிசயங்களை கொண்டுள்ளது. அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்து வேறுபட்டு காணப்படுகிறது. இவை வெவ்வேறு வகையான உணவு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பசு நெய்யை அதன் இலகுவான சுவை மற்றும் செரிமான நன்மைகளுக்காக தேர்வு செய்யலாம். அதேசமயம் எருமை நெய்யை அதன் செழுமை மற்றும் ஆற்றல் உள்ளடக்கத்திற்காக தேர்வு செய்யலாம்.
உணவில் எந்த வகை நெய்யை சேர்த்துக் கொண்டாலும் உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும் அதே வேளையில் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். எந்த வகை மெய்யாக இருந்தாலும் உணவில் மிதமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் என்பதால் மருத்துவரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வது சிறந்தது.
இதையும் படிங்க : வாய் துர்நாற்ற பிரச்சனையா? காய்ச்சாத பாலில் ஆயில் புல்லிங் செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com