Health | வாய் துர்நாற்றம் முற்றிலுமாக நீங்க எளிய குறிப்புகள் இங்கு உள்ளன.
Health | வாய் துர்நாற்றம் முற்றிலுமாக நீங்க எளிய குறிப்புகள் இங்கு உள்ளன.
Published on: November 2, 2024 at 11:26 am
Health | ஏராளமானோர் அனுபவிக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனை வாய் துர்நாற்றம் ஆகும். இந்த பிரச்சனையால் ஒருவரிடம் சகஜமாக பேசக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த பிரச்சனை ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. எனவே இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட ஐந்து எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
ஆயில் புல்லிங்
வாய் துர்நாற்றம் பிரச்சனை உடையவர்கள் நல்லெண்ணெய் அல்லது பச்ச பால் அதாவது காய்க்காத பாலை பயன்படுத்தி பத்து நிமிடம் ஆயில் புல்லிங் செய்து பின்னர் துப்ப வேண்டும்.
உணவை தவிர்த்தல்
நேரம் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும். உணவருந்தும் நேரத்தில் டீ, காபி போன்றவற்றை அருந்தி உணவினை உட்கொள்ள தாமதப்படுத்தவோ அல்லது உணவு உண்ணாமல் தவிர்க்கவும் கூடாது. சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்காது. ஒவ்வொரு வேலையும் சாப்பிட்டு முடித்த பின்னர் மூன்று முறையாகவது வாயில் தண்ணீர் எடுத்துக் கொண்டு நன்கு கொப்பளிக்க வேண்டும்.
கொய்யா இலை
உணவு அருந்திய பின்னர் சிறிதளவு சீரகம் அல்லது சோம்பு நன்கு மென்று சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை நீக்கும். கொய்யா இலைகளில் உள்ள காம்பினை நீக்கி இலைகளை நீரில் அலசி சுத்தம் செய்து மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.
பல் பொடி
வாய் துர்நாற்றம் பிரச்சனை உடையவர்கள் காலை மற்றும் இரவு இரண்டு வேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும். பல் துலக்க பல் பொடியினை பயன்படுத்த வேண்டும்.
மணத்தக்காளி கீரை
வயிற்றில் பிரச்சனை இருந்தால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். எனவே வயிற்றுப் புண்ணை நீக்க மணத்தக்காளி ஜூஸ் மிகவும் சிறந்தது. எனவே மணத்தக்காளி கீரை அல்லது மணத்தக்காளி ஜூஸ் வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனை முழுவதுமாக நீங்கும்.
(Disclaimer | இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக, எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவரை அணுகவும்)
இதையும் படிங்க : வாயு, செரிமானப் பிரச்னையா? வெறும் வயிற்றில் இந்தத் நீரை அருந்துங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com