Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Published on: November 2, 2024 at 1:31 pm
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள கான்யார் பகுதியில் சுமார் இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை (நவ.2, 2024) கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்த நிலையில், பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், இரு ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்துவருகிறது. மேலும், பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர்” என்றார்.
இது தொடர்பான சம்பவத்தில், ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ராவல்போரா பகுதியில் தற்செயலாக ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையில் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அக்டோபர் 29 அன்று அக்னூர் செக்டரில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க சுடச்சுட தயாரான மோமோஸ்.. துடிதுடிக்க பலியான இளம்பெண்: சிக்கிய 6 பீகாரிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com