Hyderabad | ஹைதராபாத்தில் மோமோஸ் உண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த 6 பேரை கைதுசெய்தனர்.
Hyderabad | ஹைதராபாத்தில் மோமோஸ் உண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த 6 பேரை கைதுசெய்தனர்.
Published on: November 1, 2024 at 8:50 pm
Hyderabad | வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாக மோமோஸ் உள்ளது. பானிபூரி போன்று இந்த உணவையும் மக்கள் வெகுவாக ரசித்து உண்பார்கள். இந்த உணவானது இனிப்பு மற்றும் காரம் ஆகிய இரு சுவைகளில் கிடைக்கும். இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் மோமோஸ் வாங்கி சாப்பிட்ட பெண் ஒருவர் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நகரின் சிங்கடா குந்தா காய்கறி சந்தையில் மோமோஸ் உணவுக் கடை நடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கடுமையான தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 6 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தர்கள் ஆவார்கள். காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பீகாரின் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களின் பெயர்கள் அல்மாஸ் அலியாஸ் அர்மான், சஜித் ஹுசைன், எம்.டி. ரயீஸ், எம்.டி. ஷாரூக், எம்.டி. ஹனீப் மற்றும் எம்.டி. ராஜிக் ஆகும்.இச்சம்பவம் குறித்து பஞ்சாரா ஹில்ஸில் வசிக்கும் ஃபரூக் உசேன் என்பவர் போலீசில் புகார் செய்தார். அவரது சகோதரி 31 வயதான ரேஷ்மா பேகம், அக்டோபர் 25-ம் தேதி மாலை ஸ்டாலில் இருந்து வாங்கிய மோமோஸை சாப்பிட்டார். அதன்பின்னர் அவரது உடல்நிலை மோசமானது என்றார்.
மேலும், அன்று கடையில் மோமோஸ் சாப்பிட்ட ரேஷ்மாவின் மகள்கள், ரிம்ஷா மற்றும் ரஃபியா மற்றும் பல வாடிக்கையாளர்களும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கின் அறிகுறிகளை அனுபவித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ₹.8 கோடி சொத்துக்காக கணவனை கொன்ற பெண்; உடலை எரிக்க 840 கிலோமீட்டர் பயணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com