Bengaluru | ₹.8 கோடி சொத்துக்காக கணவனை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
Bengaluru | ₹.8 கோடி சொத்துக்காக கணவனை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
Published on: October 28, 2024 at 4:46 pm
Updated on: October 28, 2024 at 4:49 pm
Bengaluru | கர்நாடகா மாநிலம் குடகுவில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் உடல் ஒன்று பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அக்டோபர் 8-ம் தேதி வழக்கு பதிவு செய்த கர்நாடக போலீசார் இது தொடர்பான விசாரணையை முடக்கி விட்டனர்.
இந்த நிலையில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல், தெலுங்கானாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் (52) என்பதும் இவருக்கு இரு மனைவிகள் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸாருக்கு ரமேஷ் இரண்டாவது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து ரமேஷின் இரண்டாவது மனைவி நிகாரிகா-வை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நிகாரிகா சிறு வயதிலேயே குடும்பத்தை இழந்தவர். கல்வி திருமண வாழ்க்கை என எதுவும் சரியாக அமையவில்லை.
இந்த நிலையில் சிறுவயதிலேயே ரமேஷை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த திருமணம் நிஹாரிகாவுக்கு மன நிம்மதியை கொடுக்கவில்லை.
இதன் பின்பு ஏற்பட்ட சச்சரவில் ரமேஷ் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு நிஹாரிகாவின் நண்பர்கள் இருவர் உதவி செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கணவனை கொலை செய்து விட்டு உடலை எரிக்க கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் பயணித்துள்ளார் நிகாரிக்கா.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com