Congress protest rally in Belagavi : கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா, காங்கிரஸ் போராட்டத்தின் போது, போலீஸ் அதிகாரியை அடிக்க கையை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Congress protest rally in Belagavi : கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா, காங்கிரஸ் போராட்டத்தின் போது, போலீஸ் அதிகாரியை அடிக்க கையை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: April 28, 2025 at 10:26 pm
Updated on: April 28, 2025 at 10:29 pm
பெங்களூரு, ஏப்.28 2025: காங்கிரஸ் போராட்டத்தில் போலீஸ் அதிகாரியை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் என்ன நடந்தது?
#WATCH | Karnataka Chief Minister Siddaramaiah angrily calls a Police officer on stage during Congress' protest rally in Belagavi and gestures raising his hand at him.
— ANI (@ANI) April 28, 2025
During the CM's address here, a few women, who are reportedly BJP activists, indulged in sloganeering… pic.twitter.com/qtC6hL9UYT
மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து, கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா உரையாற்றினார். அப்போது, அங்கு பெண்கள் சிலர் கறுப்புக் கொடிகளை காட்டினார்கள்.
இவர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் சித்த ராமையா காவல்துறை அதிகாரிகளை மேடைக்கு வரவழைத்து கோபமாக பேசினார். மேலும், அதிகாரி ஒருவரை அடிக்க கையை ஓங்கினார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளன.
கடும் கண்டனம்
இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜேடி(எஸ்) தலைவர்கள் சித்தராமையா காவல்துறை அதிகாரியிடம் நடந்து கொண்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் காணொளிகளை சமூக ஊடக தளமான எக்ஸில் பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் சித்த ராமையா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
பா.ஜ.க. விமர்சனம்
இந்தச் சம்பவம் தொடர்பாக சித்த ராமையாவுக்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து. இது குண்டர் நடத்தை எனவும் விமர்சித்துள்ளது. கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் விஜயேந்திரா இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க : ‘இது காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல’; காங்கிரஸ் அதிரடி அறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com