நீரில் தரையிறங்கும் விமானம்.. மாலத்தீவில் வந்தாச்சு!

India’s First Seaplane Service : நீர் விமானங்கள் நீரில் பறக்கவும் தரையிறங்கவும் முடியும்; பெரிய விமான நிலையம் தேவையில்லை.

Published on: April 30, 2026 at 1:58 pm

புதுடெல்லி, ஏப்.30, 2026: இந்தியாவில் முதல் முறையாக வணிக ரீதியான நீர் விமான சேவை லட்சத்தீவில் தொடங்கப்பட உள்ளது. ஸ்கைஹாப் ஏவியேஷன் (SkyHop Aviation) நிறுவனம் DGCA அனுமதி பெற்றுள்ளதால், 19 இருக்கைகள் கொண்ட நீர் விமானங்கள் விரைவில் லட்சத்தீவின் பல தீவுகளையும் இந்தியாவின் கரையோர நகரங்களையும் இணைக்க உள்ளன.

முக்கிய அம்சங்கள்

ஸ்கைஹாப் ஏவியேஷன் நிறுவனத்தின் சேவை இந்த ஆண்டு தொடங்குகிறது. முதல் கட்டமாக லட்சத்தீவின் குறைந்தது 5 தீவுகள் ஒன்றோடொன்று மற்றும் இந்தியாவின் கரையோர நகரங்களோடு இணைக்கப்படும்.

விமான வகை

டி ஹேவிலேண்ட் கனடா DHC-6 ட்வின் ஆட்டர் (19 இருக்கைகள் கொண்ட நீர் விமானம்).
நீர் விமானங்கள் நீரில் பறக்கவும் தரையிறங்கவும் முடியும்; பெரிய விமான நிலையம் தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம்.

இதன்மூலம், லட்சத்தீவின் அழகிய தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் எளிதில் செல்ல முடியும். தீவுகளுக்கிடையேயான பயணம், படகு சேவையை விட வேகமாகவும் வசதியாகவும் இருக்கும்.
மேலும், தீவுகளில் வாழும் மக்களுக்கு தினசரி போக்குவரத்து எளிதாகும். தொடர்ந்து, தீவுகளுக்கும் கரையோர நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் பெரிதும் குறையும். இதனால், லட்சத்தீவின் சுற்றுலா துறை புதிய உயரத்தை அடையும். தொலைதூர பகுதிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களோடு நேரடி இணைப்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பஜாஜ் ஃபைனான்ஸ் வாரியம்.. ராஜீவ் பஜாஜ் ராஜினாமா? உருவாகிறது பஜாஜ் ஆட்டோ கிரெடிட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com