Assembly Election 2026: மேற்கு வங்க இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 142 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
Assembly Election 2026: மேற்கு வங்க இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 142 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Published on: April 29, 2026 at 12:25 pm
கொல்கத்தா, ஏப். 29 2026: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் 2026-ன் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 142 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா, ஹாவ்ரா மற்றும் 24 பர்கானாஸ் மாவட்டங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் முழு பலத்துடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பரனாகரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) கோளாறு ஏற்பட்டதாகவும், நாடியா பகுதியில் பாஜக வாக்குச்சாவடி முகவர் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பசந்தி பகுதியில் பாஜக வேட்பாளரின் வாகனத்தை மர்ம நபர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை.. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com