Commonwealth Youth Weightlifting Championships : காமன்வெல்த் இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 4 தங்கம் வென்றுள்ளனர்.
Commonwealth Youth Weightlifting Championships : காமன்வெல்த் இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 4 தங்கம் வென்றுள்ளனர்.

Published on: April 29, 2026 at 11:38 am
அபியா, ஏப் 29 2026: காமன்வெல்த் இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவாவின் அபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் சுனில் சிங் மொத்தம் 271 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். பெண்கள் 58 கிலோ பிரிவில் ஐசாங்ஃபா கோகோய் 185 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். ஆண்கள் 71 கிலோ பிரிவில் அபினோப் கோகோய் மொத்தம் 284 கிலோ எடையை தூக்கி தங்கம் கைப்பற்றினார்.
யூனிவர்சல் கப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த சாரு பெசி, ஆண்கள் 65 கிலோ பிரிவில் மொத்தம் 289 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
இதையும் படிங்க : டென்மார்க் பேட்மிண்டன்.. இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com