தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இன்று வாங்கலாமா?

Gold Rate Today : சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

Published on: April 29, 2026 at 12:51 pm

சென்னை, ஏப் 29 2026 : உலக சந்தை நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு மாற்றம் மற்றும் உள்ளூர் தேவை போன்றவை தங்க விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,200 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15,218-க்கும் சவரன் ரூ. 121,744க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ட்ரம்ப் முடிவால் தலைகீழ் மாற்றம்.. கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com