How to make chicken varuval | ஒரு கிலோ சிக்கனில் சுவையான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
How to make chicken varuval | ஒரு கிலோ சிக்கனில் சுவையான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Published on: November 10, 2024 at 7:24 am
How to make chicken varuval | நான்வெஜ் பிரியர்களுக்கு ஏற்ற காரசாரமான, சுவையான சிக்கன் வறுவல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் -1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
தயிர் -1 டேபிள் ஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை- 1 கொத்து
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
அரைக்க வேண்டியவை
பட்டை -2
கிராம்பு -2
ஏலக்காய் -3
சீரகம் -1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
வர மிளகாய் -3 (காரத்திற்கு ஏற்ப )
மல்லி விதை -1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை -1 கைப்பிடி அளவு
புதினா இலை -1 கைப்பிடி அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு விழுதுஇ புளிக்காத கெட்டியான தயிர், உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், எண்ணெய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து மசாலா பொருட்கள் சிக்கன் மீது நன்கு படும்படி கலந்து விட வேண்டும். இதை மூடி ஒரு மணி நேரத்திற்கு அப்படியே ஊர வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, சீரகம், சோம்பு, காரத்துக்கு ஏற்ப வர மிளகாய், மல்லி விதை, மற்றும் மிளகு சேர்த்து அடுப்பு தீயை லோ ஃபிளேமில் வைத்து வறுக்க வேண்டும். இவை சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிய துண்டாக நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
தேங்காய் இல்லாமலும் செய்யலாம். பின்னர் இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பிரவுன் கலர் வரும் வரை வதக்க வேண்டும். இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மை போல் அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
சிக்கனில் உள்ள தண்ணீர் முற்றிலுமாக பற்றி போகும் வரை சிக்கனை நன்கு கிளறி விட வேண்டும். பின்னால் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்க வேண்டும்.
இதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுது மற்றும் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பாத்திரத்தில் அடி பிடிப்பது போல் தோன்றினால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சிக்கன் முழுமையாக வேகும் வரை நிதானமாக கிளறி விட்டு வெந்த பின்னர் அடுப்பை ஆஃப் செய்யவும். இப்போது சுவையான சிக்கன் வறுவல் தயார்.
இதையும் படிங்க : சுவையான நாட்டுக் கோழிக் குழம்பு; கிராமத்து ஸ்டைலில் இப்படி பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com