₹1,20,000- ஐ நெருங்கும் தங்கம்.. இன்று வாங்கலாமா? ரேட் என்ன?

Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.

Published on: May 15, 2026 at 10:48 am

சென்னை, மே 15 2026: சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக போக்கு போன்ற காரணங்களால் தங்க விலையில் தினசரி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்க விலையில், இன்று சற்றே சரிவு ஏற்பட்டிருப்பது நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை

நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15,050க்கும், ஒரு சவரன் ரூ.1,20,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்ததையடுத்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,950க்கு விற்பனையாகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிராமுக்கு ரூ. 10 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 315க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 305க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 305000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ஃப்ளெக்ஸி கேப் vs ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்.. நீண்ட கால முதலீடுக்கு எது உகந்தது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com