Mythology | சூதாட்டத்தில் அர்ஜுனன் இழந்த காண்டீபத்தை கர்ணன் ஏன் வாங்க மறுத்தான் தெரியுமா?
Mythology | சூதாட்டத்தில் அர்ஜுனன் இழந்த காண்டீபத்தை கர்ணன் ஏன் வாங்க மறுத்தான் தெரியுமா?
Published on: November 10, 2024 at 8:49 am
Updated on: November 10, 2024 at 9:20 am
Mythology | பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று தங்களிடம் இருந்த அனைத்து செல்வங்களையும் துரியோதனிடம் இழந்தனர். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக்கொள் என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்து விட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று கூறினான் கர்ணன். நீ அல்லவோ சுத்த வீரன். அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான். வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான் அர்ஜுனன்.
இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது. அது என்ன என்று கேட்டான் அர்ஜுனன். கிருஷ்ணரின் அருளால் தான் நீ காண்டீவத்தை பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை என்றார். மேலும் சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்தபோது அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே ஏன் தெரியுமா?
கிருஷ்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்க முடிந்தது. ஆனால், கிருஷ்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும். அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன் கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான்.
இதையும் படிங்க : உலகின் உயரமான மலை; கடுங்குளிர்: ஆதி சங்கரர் கண்டுபிடித்த சிவலிங்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com