Mythology | உத்தரகாண்ட் மாநிலத்தில் மலையின் உச்சியில் அமைந்துள்ள சிவன் கோவில் தெரியுமா?
Mythology | உத்தரகாண்ட் மாநிலத்தில் மலையின் உச்சியில் அமைந்துள்ள சிவன் கோவில் தெரியுமா?
Published on: November 7, 2024 at 8:51 am
Mythology | உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் சுமார் 3680 மீட்டர் உயரத்தில் துங்கநாத் சிவன் கோயில் உள்ளது. இது உலகின் மிகவும் உயரமான சிவன் கோவிலாகும். இந்த கோவிலை ஆதி சங்கராச்சாரியார் கண்டுபிடித்தார். இப்பகுதி குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவுடன் காணப்படும்.
கோவில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பதால் கோவிலின் முன்புறம் பணி எப்பொழுது உறைந்த நிலையில் இருக்கும். வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இந்த ஆலயம் திறக்கப்படும். மீதமுள்ள நாள்களில் துங்கநாத் கோவிலில் உள்ள சிவபெருமானின் அடையாளமான சிலை துங்கநாத்தில் உள்ள முகுநாதன் எந்த இடத்திற்கு மாற்றப்படுகிறது.
இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் மலை ஏறுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மிகவும் தூரமான மற்றும் உயரமான இந்த மலை ஏற்றத்தின் போது கடுமையான பனிப்பொழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மலையேற்ற பகுதியானது பச்சை புல்வெளிகள், பாறைகள் நிறைந்த பகுதியாக இயற்கை அழகுடன் காணப்படுகிறது.
இந்த எழில் பொங்கும் காட்சி கோவிலுக்கு செல்பவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவில் மகாபாரத பஞ்சபாண்டவர்களுடன் தொடர்புடையது. பாண்டவர்களை தவிர்ப்பதற்காக சிவன் நந்தி வடிவத்தை ஏற்றுக்கொண்டார். அப்போது, சிவனின் உடல் பாகங்கள் தோன்றிய இடங்கள் பஞ்ச கேதார ஆலயங்களாக மாறின.
அதன்படி, சிவனின் கைகள் வெளிப்பட்ட இடம் துங்கநாத் என நம்பப்படுகிறது. இந்த கோவிலின் தோற்றம் சிறியதாக இருந்தாலும் அதன் அமைப்பு மற்றும் சிறந்த கட்டிடக்கலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. மே முதல் ஜூன் வரையிலான இடைப்பட்ட காலம் இந்த கோவிலுக்கு செல்ல சிறந்த நேரம் ஆகும். கோவிலை சுற்றியுள்ள இமயமலையின் அழகு இயற்கை விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : இந்திரஜித் பெற்ற வரம்; 14 ஆண்டுகள் விழித்திருந்த லட்சுமணன்: ராமயாணத்தில் இந்த விஷயம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com