இந்திரஜித் பெற்ற வரம்; 14 ஆண்டுகள் விழித்திருந்த லட்சுமணன்: ராமயாணத்தில் இந்த விஷயம் தெரியுமா?

Mythology | இராமாயணத்தில் 14 ஆண்டுகள் தூங்கிய ஊர்மிளாவை பற்றி தெரியுமா?

Published on: November 6, 2024 at 8:49 am

Mythology | இராமாயணத்தில் ராமனும் சீதையும் வனவாசம் சென்ற போது அவருக்கு முக்கிய பாதுகாப்பு அரணாக விளங்கியது அவரது தம்பி லட்சுமணன். இதற்கு மிக முக்கியமான காரணம் லட்சுமணனின் மனைவி ஊர்மிளா. 14 ஆண்டுகள் ஒரு நொடியும் உறங்காமல் லக்ஷ்மணன் இருக்க வேண்டும் என்று தூக்கத்தின் கடவுளான நித்திரா தேவி இடம் லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளா வேண்டினாள்.

ஆனால் அதற்கு நித்திரா தேவி சம்மதிக்கவில்லை. அப்போது ஊர்மிளா தன் கணவனின் கடமையில் எந்த தடங்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காக அவரின் தூக்கத்தையும் சேர்த்து நானே தூங்குவதற்கான வரம் அருளுங்கள் என்று கேட்டு வரம் பெற்றார். தூங்குவது பெரிய தியாகமா என்று நினைக்கலாம் ஆனால் 14 ஆண்டுகள் லக்ஷ்மணனின் தூக்கத்தையும் சேர்த்து தூங்குவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.

உணவின்றி 14 ஆண்டுகள் தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மிகவும் பலவீனமடையும் என்பதை பொருட்படுத்தாமல் இந்த தியாகத்தை செய்ய துணிந்தால். ராவணனை அளிக்க வேண்டுமானால் அதற்கு முன் அவனின் மகன் இந்திரஜித்யை அளிக்க வேண்டும். ராமனால் இந்திரஜித்தை அளிக்க முடியாத நிலை இருந்தது. இதற்கு காரணம் இந்திரஜித் வாங்கி இருந்த வரம் தான்.

14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கும் ஒருவனால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரத்தை வாங்கியவன் இந்திரஜித். அதனால் 14 ஆண்டுகள் உறங்காமல் இருந்த லட்சுமணன் இந்திரஜித்யை அளித்து ராமனுக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். இராமாயணத்தில் லக்ஷ்மணனின் தியாகத்தை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு ஊர்மிளாவின் தியாகத்தை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

இராமாயண காவியத்தை அறிந்த பலர் ஊர்மிளாவின் தியாகத்தைப் பற்றி பெரிய அளவில் பேசவில்லை. லட்சுமணன் மீது அளவற்ற காதல் வைத்திருந்த ஊர்மிளா செய்த தியாகத்தால் தான் இராமாயண போரில் வெற்றி பெற முடிந்தது.

இதையும் படிங்க :  வெட்டு காயத்துடன் வெளிப்பட்ட சிவலிங்கம்; 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை: எங்குள்ளது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com