Mythology | நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் பல்வேறு தனிச்சிறப்புகளை உள்ளடக்கி உள்ளது.
Mythology | நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் பல்வேறு தனிச்சிறப்புகளை உள்ளடக்கி உள்ளது.
Published on: November 5, 2024 at 10:56 am
Mythology | தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது நெல்லையப்பர் கோவில். சுயம்புவாக தோன்றிய இந்த நெல்லையப்பர் சிவலிங்கம் மிகவும் புகழ்பெற்றது. நெல்லையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில். இந்தக் கோவிலில் நெல்லையப்பர் என்ற பெயரில் மூலவரும் காந்திமதி என்ற பெயரில் அம்பாலும் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர்.
இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பழமையான கோயில் ஆகும். இந்த கோவிலில் ஆடிப்பூர உற்சவம், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, புரட்டாசி நவராத்திரி திருவிழா என பல திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பானதாகும். திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு இறுதியில் தேரோட்ட நிகழ்வும் நடைபெறும்.
இக்கோவின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. பல்வேறு தனிச்சிறப்புகளை உள்ளடக்கிய இந்த கோவிலுக்கு மூலக்கதை ஒன்று உள்ளது. அது என்னவென்றால் முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது.
இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது.
அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
இதையும் படிங்க : நெஞ்சை பிளந்த அனுமன்; வியந்து பார்த்த சபை: அன்று நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com