Mythology | சீதாதேவி கொடுத்த முத்து மாலையை அனுமன் ஏன் உடைத்தார் தெரியுமா?
Mythology | சீதாதேவி கொடுத்த முத்து மாலையை அனுமன் ஏன் உடைத்தார் தெரியுமா?
Published on: October 31, 2024 at 1:27 pm
Mythology | அனுமனின் திறமையையும் ஸ்ரீ ராமபிரான் மீதான பக்தியையும் உணர்ந்திருந்த சீதாதேவி அழகான ஒளி வீசும் முத்துமாலை ஒன்றே பரிசாக வழங்கினார். ஆனந்தத்துடன் முத்து மாலையை பெற்றுக் கொண்ட அனுமன் முத்து மாலையில் இருந்த ஒவ்வொரு முத்துக்களாக கடித்து உடைக்க தொடங்கினார். இதை பார்த்து சபையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
அனுமன் ஏன் அப்படி செய்தார் என்று ராமருக்கு நன்றாக தெரியும். இருப்பினும் அனுமனுடைய பக்தியை பறை சாற்றுவதற்காக அனுமனை ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு அனுமன் பிரபு உங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள சீதாதேவி கொடுத்துள்ள முத்துமாலையில் உங்கள் இருவரின் உருவம் இருக்கும் என்று நினைத்து அதை ஒவ்வொன்றாக உடைத்து பார்த்தேன்.
ஆனால் எதிலுமே உங்கள் தி ரு உருவம் இல்லை. உங்கள் திரு உருவம், பெயர் சொல்லாத எந்த ஒரு பொருளும் எனக்கு தேவை இல்லை என்று கூறினார். அப்படியானால் எப்பொழுதும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் நீ உன்னுள் நான் இருப்பதை நிரூபித்து காட்ட முடியுமா என்று கேட்டார் . இதைக் கேட்ட சபையில் இருந்தவர்கள் அனுமன் வசமாக மாட்டிக் கொண்டார் என்று எண்ணினார்கள்.
என்னுள் ஸ்ரீ ராமபிரான் இருப்பதை இப்போது காட்டுகிறேன் என்று தன் நெஞ்சை பிளந்து காட்டினார் அனுமன். அதில் ஸ்ரீ ராமனும் சீதா தேவியும் இருப்பதை பார்த்த அனைவரும் அனுமனின் எல்லையற்ற அன்பை கண்டு வியப்படைந்தனர்.
இதையும் படிங்க : வாழை இலையில் விருந்து; ஒரு பக்கம் சோறு, மறுபக்கம் காய், கனி வைப்பது ஏன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com