Health | தினம்தோறும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
Health | தினம்தோறும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
Published on: November 6, 2024 at 10:00 am
Health | தினமும் ஒரு சிறிய நடை உடல் எடையை குறைக்க உதவுகிறது. நடைப்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வதால் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது. உடல் எடையை குறைப்பதற்காக அதிக பணம் செலவழித்து சிறப்பு பயிற்சி அல்லது ஜிம் போன்றவற்றை நாட வேண்டிய அவசியம் இல்லை.
ஜிம் சென்று அதிதீவிர பயிற்சி மேற்கொள்வதை ஒப்பிடுகையில் இயற்கை சூழலான பூங்கா அல்லது சுற்றுப்புறத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். தினமும் தொடர்ச்சியாக ஒரு சிறிய தூரம் அளவு நடைபயிற்சி செய்வது உடல் எடையை கட்டுப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
நடைபயிற்சியின் போது குறைந்தது அரை மணி நேரம் ஆவது நடக்க வேண்டும். மெதுவான நடை மற்றும் வேகமான நடை என இருவிதமாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது சுறுசுறுப்பாகவும் நேர்மறை எண்ணங்களுடனும் நல்ல மனநிலை உடனும் இருக்க வேண்டும். இவ்வாறு நடை பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் பெறும்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
ஒருவரின் அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்று நடைப் பயிற்சி. இருப்பினும் நடைப்பயிற்சி முறையானது ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும் எனவே நடை பயிற்சியில் ஈடுபடும் முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது சிறந்தது.
இதையும் படிங்க : ஆஸ்துமா பிரச்னையா? இந்த 5 உணவுகளை மறக்காதீங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com