CSK பஸ்ஸை ரோடு சைடு நின்னு பார்ப்பேன்.. சாய் சுதர்சன்!

Sudharsan’s CSK Connection : “எங்கள் பள்ளியைக் கடந்து சிஎஸ்கே அணியின் பேருந்து செல்வதைப் பார்ப்பதற்காகவே நான் சாலையில் நிற்பேன்” என சுதர்சன் தெரிவித்துள்ளார்.

Published on: May 22, 2026 at 12:22 pm

சென்னை, மே 22, 2026: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஆன சாய் சுதர்சன், தனது பள்ளியைக் கடந்து செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேருந்தைப் பார்ப்பதற்காக சாலையோரம் நிற்பது வழக்கமாக இருந்தது. அந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பு, பின்னர் சிஎஸ்கே அணிக்கு எதிராக ரன்கள் குவிப்பதில் ஒரு தனித்துவமான காதலாக மாறியது” எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் பயணம்

சாய் சுதர்சன், 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். இவர், 2023–இல் 8 ஆட்டங்களில் 362 ரன்கள் எடுத்தார். இதன் சராசரி 51.71, ஸ்டிரைக் ரேட் 141.40 ஆகும். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 13 ஆட்டங்களில் 554 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 46.17, ஸ்டிரைக் ரேட் 157.83 ஆகும்.

சுதர்சனின் கருத்துகள்

சி.எஸ்.கே அணி குறித்து சாய் சுதர்சன் கூறுகையில், “சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சிறப்பான அனுபவம்; நான் கடந்த காலத்தைப் பார்ப்பதில்லை; நிகழ்காலமே முக்கியம்.
ஒவ்வொரு ஆட்டமும் புதிய தொடக்கம். முந்தைய இன்னிங்ஸின் பாதிப்புகளைச் சுமந்துகொண்டு இருக்காமல் இருப்பது முக்கியம்” என்றார்.

சாய் சுதர்சன் 50 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்த கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இவ்வளவு பெரியத் தொகை அபராதமா? ஹர்திக் பாண்ட்யா சோகம்..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com