மாதம் ரூ.34,000 சம்பளம்.. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி.. உடனே முந்துங்க!

Kudankulam Nuclear Power Plant : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: June 29, 2026 at 3:59 pm

திருநெல்வேலி, ஜூன் 29, 2026: திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் பல்வேறு டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 255 காலியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 29.06.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களில் பிளாண்ட் ஆபரேட்டர் (Plant Operator) – 136, எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronics Mechanic) – 15, இன்ட்ரூமெண்டேசன் மெக்கானிக் (Instrumentation Mechanic) – 15, எலக்ட்ரீசியன் (Electrician) – 47, பிட்டர் (Fitter) – 30, டர்னர் (Turner) – 5, மெஷினிஸ்ட் (Machinist) – 5, மற்றும் வெல்டர் (Welder) – 2 இடங்கள் உள்ளன.
இதில் பிளாண்ட் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி 18 முதல் 24 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை ஆன்லைன் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு அடிப்படையில் நடைபெறும். தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மாத சம்பளமாக ரூ. 34,720 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் NPCIL Careers இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 29.06.2026 விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு, தென்னிந்தியாவில் தொழில்நுட்ப துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு முக்கியமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க மகாராஷ்டிரா TET 2026 தேர்வுத்தாள் கசிவு.. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை.. தேவேந்திர பட்னாவிஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com