Actress Aishwarya Rai | பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது கணவர் அபிஷேக் பச்சனிடமிருந்து விவாகரத்து செய்தியால் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். எனினும் அவரோ, அபிஷேக்கோ இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஐஸ்வர்யா ராய் 1994ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரே ஒருவரை மட்டும் பின்தொடர்கிறார். ஆம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரே ஒருவரை மட்டும் பின்தொடர்கிறார்.
யார் அந்த பிரபலம்
ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ஒரே நபர் வேறு யாருமல்ல, அவரது கணவர் அபிஷேக் பச்சன்தான். ஆம். ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனை மட்டும் சமூக வலைத்தளத்தில் பின்தொடர்கிறார். மேலும், ஐஸ்வர்யா தனது கணவருடன் பல படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, ஐஸ்வர்யா ராய் அக்டோபர் 22 அன்று தனது தாய் மற்றும் மகள் ஆராத்யா உட்பட தனது அன்புக்குரியவர்களுடன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.
அன்று மாலை எடுத்த படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இருப்பினும், இந்த படங்களில் அபிஷேக் பச்சன் இல்லை. இதையடுத்து ரசிகர்கள் பல யூகங்களை வெளியிட்டனர். ஆனால், பின்னர் ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தினர், வேலையில் பிஸியாக இருப்பதால் அபிஷேக் பச்சன் இங்கு வர முடியவில்லை என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்? காட்டுத் தீயாய் பரவும் தகவல்: உண்மை என்ன?
Saif Ali Khan Attacked | நடிகர் சைஃப் அலிகான் கத்திக் குத்து காயத்துக்கு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்….
பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐந்து திரைப்படங்கள் இங்குள்ளன….
விஎஃப் எக்ஸ் இல் சொதப்பிய படங்களின் லிஸ்ட் இங்குள்ளன…
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்….
90-ஸ் கிட்ஸ் ஃபேவரைட் ஷோவான சக்திமான் 2-ஆம் பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்