ஆமா.. அது உண்மைதான்.. உறுதிப்படுத்திய மௌனி ராய்!

Mouni Roy: 4 ஆண்டுகால திருமணத்திற்குப் பிறகு சூரஜ் நம்பியாருடனான விவாகரத்தை உறுதி செய்தார் மௌனி ராய்.

Published on: May 15, 2026 at 6:01 pm

ஹைதராபாத், மே 15, 2026: நடிகை மௌனி ராய், கணவர் சுரஜ் நம்பியாருடன் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார். “நாங்கள் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிவதைத் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

திருமண வாழ்க்கை முறிவு

மௌனி ராய் மற்றும் சுரஜ் நம்பியார் 2022 ஜனவரியில் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டுகள் கழித்து, இருவரும் பரஸ்பர புரிதலுடன் பிரிவதை தீர்மானித்துள்ளனர். இந்த நிலையில், “நாங்கள் நல்ல நண்பர்களாகவே தொடர்கிறோம்” என்று மௌனி குறிப்பிட்டுள்ளார். மேலும், மௌனி தனது ரசிகர்களிடம், “எங்கள் தனிப்பட்ட முடிவை மதிக்கவும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில், ரசிகர்கள் அவருக்கு ஆதரவு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மௌனி ராய், நாகினி, கே.ஜி.எப்: சாப்ட்டர் 2, பிரம்மாஸ்திரா போன்ற படங்களில் நடித்துள்ளார். சுரஜ் நம்பியார், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளராக திகழ்கிறார். இந்த பிரிவு, பாலிவுட் உலகில் திருமண வாழ்க்கை சவால்கள் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது.

இதையும் படிங்க : 20 ஆண்டுகளுக்கு பின் திரிஷா- சூர்யா ஜோடி.. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கருப்பு.. முன்பதிவு எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com