நிக் ஜோனாஸ்- பிரியங்கா ஜோடியை திரையில் எதிர்பார்க்கலாமா? அவரே சொன்ன பதில்!

Nick Jonas Bollywood Debut : நிக் ஜோனாஸ் பாலிவுட் படத்தில் அறிமுகமா? என்ற கேள்விக்கு நடிகை பிரியங்கா சோப்ரா, “நாங்கள் ஏற்கனவே ஒன்றாக வேலை செய்கிறோம்” எனப் பதிலளித்துள்ளார்.

Published on: May 15, 2026 at 5:45 pm

புதுடெல்லி, மே 15, 2026: நிக் ஜோனாஸ் பாலிவுட் படத்தில் அறிமுகமா? என்ற கேள்விக்கு நடிகை பிரியங்கா சோப்ரா, “நாங்கள் ஏற்கனவே ஒன்றாக வேலை செய்கிறோம்” எனப் பதிலளித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், “நாங்கள் இருவரும் படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரிக்கிறோம். எதிர்காலத்தில் படத்திலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது“ என்றார். மேலும் பிரியங்கா சோப்ரா, “நிக் மற்றும் நான் ஒன்றாக வேலை செய்கிறோம். அது படம் ஆகுமா தெரியவில்லை, ஆனால் நிச்சயம் ஒருநாள் நடக்கும்” என்றார்.

இதற்கிடையில், “அது ஹிந்தி படம் ஆகுமா, வேறு வகை படம் ஆகுமா தெரியவில்லை. ஆனால் நாங்கள் ஒன்றாக திரையில் தோன்றுவோம்” என்று குறிப்பிட்டார். திருமணத்திற்குப் பிறகு, ரசிகர்கள் பிரியங்கா – நிக் ஜோடியை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பிரியங்கா தற்போது எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் ‘வரணாசி’ படத்தில் நடித்து வருகிறார்; இதில் மகேஷ் பாபு, ப்ரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மறுபுறம், நிக் ஜோனாஸ் தனது சோலோ மியூசிக் டூர்-இல் பிஸியாக உள்ளார்; அமெரிக்காவின் பல நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நடிகர் தர்ஷனுக்கு விரைவில் ஜாமின்? சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு!

மீண்டும் புராணக் கதை.. பரபரக்கும் பாலிவுட்.. கடவுள் அவதாரம் எடுக்கும் ரன்வீர் சிங்? கதாபாத்திரம் தெரியுமா?
Ranveer Singh to Play Lord Shiva

மீண்டும் புராணக் கதை.. பரபரக்கும் பாலிவுட்.. கடவுள் அவதாரம் எடுக்கும் ரன்வீர் சிங்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com