‘வில் அம்பு’ பட இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் காலமானார்

Ramesh Subramaniam Passes Away: ‘வில் அம்பு’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் காலமானார்.

Published on: May 28, 2026 at 6:40 pm

Updated on: May 28, 2026 at 6:41 pm

சென்னை, மே 28 2026: தமிழ் திரையுலகில் ‘வில் அம்பு’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம். இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், 2016ல் வெளியான ‘வில் அம்பு’ படத்தின் மூலம் இயக்குநரானார். எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 49.

அவரது மறைவு செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும், நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியை நெருங்கும் திரிஷ்யம்-3.. சாதித்த மோகன் லால்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com