Actor Manoj Kumar died at 87 in Mumbai: மூத்த நடிகர் மனோஜ் குமார் 87 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Actor Manoj Kumar died at 87 in Mumbai: மூத்த நடிகர் மனோஜ் குமார் 87 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Published on: April 4, 2025 at 12:53 pm
Updated on: April 4, 2025 at 12:58 pm
மும்பை, ஏப் 4 2025: மூத்த நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் வெள்ளிக்கிழமை (ஏப்.4 2025) மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. இந்த நிலையில் தனது தந்தையின் மரணம் குறித்து அவரது மகன் குணால் கோஸ்வாமி, ”நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் போராடி வந்த மனோஜ் குமார் அதிகாலை 3.30 மணியளவில் காலமானார்” என உறுதிப்படுத்தினார்.
நடிகரின் உடல் ஜூஹுவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும். மனோஜ் குமார் தனது தேசபக்தி படங்களுக்கு பெயர் பெற்றவர் ஆவார். இவர் நடித்து வெற்றிப் படங்களில் ‘புரப் அவுர் பஸ்சிம், ‘கிராந்தி’ மற்றும் ‘ரோட்டி, கபட அவுர் மகான்’ ஆகியவை அடங்கும்.
மனோஜ் குமார் தனது தேசபக்தி படங்களுக்காக பிரபலமானவர், இதனால் அவருக்கு ‘பாரத் குமார்’ என்ற புனைப்பெயர் கிடைத்தது. அவர் ஒரு தேசிய திரைப்பட விருதையும் ஏழு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு இப்படி ஒரு கனவா? நிறைவேறாமல் போச்சே.. அச்சச்சோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com