Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர காங்கிரஸ் கட்சி தயாராகி வருவதாக காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி கூறினார். வக்ஃப் திருத்த சட்டம் இன்று (ஏப்.4 2025) இரு அவைகளிலும் நிறைவேறியது.
Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர காங்கிரஸ் கட்சி தயாராகி வருவதாக காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி கூறினார். வக்ஃப் திருத்த சட்டம் இன்று (ஏப்.4 2025) இரு அவைகளிலும் நிறைவேறியது.
Published on: April 4, 2025 at 12:56 pm
புதுடெல்லி, ஏப்.4 2025: நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, வக்ஃப் (திருத்தம்) மசோதா 2024 இன்று (ஏப்.4 2025) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் என அக்கட்சியின் மூத்தத் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 இன் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது குறித்து காங்கிரஸ் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
வக்ஃப் திருத்த மசோதா வியாழக்கிழமை (ஏப்.3 2025) மக்களவையிலும், வெள்ளிக்கிழமை (ஏப். 4 2025) மாநிலங்களவையிலும் 13 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
The INC's challenge of the CAA, 2019 is being heard in the Supreme Court.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) April 4, 2025
The INC's challenge of the 2019 amendments to the RTI Act, 2005 is being heard in the Supreme Court.
The INC’s challenge to the validity of the amendments to the Conduct of Election Rules (2024) is being…
இந்த மசோதா, “முஸ்லிம்களுக்கு எதிரானது” மற்றும் “அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது” என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. வக்ஃப் திருத்த மசோதா தாக்கலின் போது, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் வாரியங்கள் சட்டப்பூர்வ அமைப்புகளாக மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த மசோதாவுக்கு மக்களவையில் 288 உறுப்பினர்கள் ஆதரித்தும் 232 உறுப்பினர்கள் எதிர்த்தும் முன்னதாக ஒப்புதல் அளித்தனர்.
இந்த நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் 128 வாக்குகள் ஆதரவாகவும் 95 வாக்குகள் எதிராகவும் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இதனை வரவேற்றார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ”சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நாட்டின் கூட்டுத் தேடலில் ஒரு திருப்புமுனை தருணம்” என்றார்.
இதையும் படிங்க : பா.ஜ.க இஸ்லாமியர்களை துன்புறுத்த விரும்புகிறது: வக்ஃப் குறித்து மல்லிகார்ஜுன கார்கே
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com