புதுடெல்லி, ஏப்.3 2025: பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமியர்களை துன்புறுத்த விரும்புகிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். நீண்ட விவாதத்துக்கு பின்னர் மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதா இன்று (ஏப்.3 2025) நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்கள் வாக்களித்தனர். எதிராக 234 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இந்த திருத்த மசோதா சிறுபான்மையினர் நலன்களை பாதுகாக்கிறது என ஆஞங்கட்சியும், சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார்.
முன்னதாக, கேள்வி நேரம் முடிந்த பிறகு புதன்கிழமை (ஏப்.2 2025) மக்களவையில் சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் கேள்வி நேரத்திற்குப் பிறகு இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதாவது, வக்ஃப் திருத்த மசோதா, 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பிறகு புதன்கிழமை இரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது, இந்த மசோதா இன்று (ஏப்.3 2025) மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: ஏப்.4 போராட்டம்.. களத்திற்கு வரும் விஜய்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்