பாரதிராஜா மறைவு: .நாளை படப்பிடிப்புகள் ரத்து… தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

Bharathiraja: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர சங்கம் அறிவித்துள்ளது.

Published on: June 10, 2026 at 2:09 pm

சென்னை, ஜுன் 10 2026: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவால் திரையுலகம் முழுவதும் துயரத்தில் மூழ்கியுள்ளது. 84 வயதான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

அவரது மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகின் பல்வேறு சங்கங்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுததினார்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : சரிந்தது இயக்குனர் இமயம் பாரதிராஜா.. ஓடோடி வந்த முதல்வர் விஜய்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com