YouTuber Mukhtar Ahmed : தமிழக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருந்த பிரபல யூ-ட்யூபர் முக்தார் அஹமது கைது செய்யப்பட்டுள்ளார்
YouTuber Mukhtar Ahmed : தமிழக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருந்த பிரபல யூ-ட்யூபர் முக்தார் அஹமது கைது செய்யப்பட்டுள்ளார்

Published on: June 10, 2026 at 5:24 pm
Updated on: June 11, 2026 at 12:32 am
சென்னை, ஜூன் 10, 2026: யூ-ட்யூப் சமூக வலைதளத்தில் பா.ஜ.க பெண் நிர்வாகி அலிசா அப்துல்லாவின் பச்சிளம் குழந்தைகள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், முக்தார் அஹமது என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து பெங்களூருவில் பதுங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அவரை தமிழக போலீசார் தட்டித் தூக்கியுள்ளனர்.
அதாவது, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தாரை சைபர் கிரைம் போலீசார் புதன்கிழமை (ஜூன் 10, 2026) கைது செய்துள்ளனர். அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் திட்டம் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை, சமூக வலைதளங்களில் பெண்களை குறிவைத்து வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.
முக்தாருக்கு எதிராக புகார் அளித்த அலிஷா அப்துல்லா, தனது பதிவில், “எனது புகாருக்கு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் காவல் துறையினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் நன்றி தெரிவித்துள்ளார். அலிஷா அப்துல்லா மேலும், “இந்த நடவடிக்கையின் மூலம் விஜய் ஏற்கனவே கூறியதைச் செய்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர் எடுத்துக் கொண்ட உறுதியான நிலைப்பாடு, இப்போது நடைமுறையில் வெளிப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்தாரின் கைது, சமூக வலைதளங்களில் பெண்களை குறிவைத்து வரும் தவறான செயல்களுக்கு எதிராக போலீசார் எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதனால், பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசு மற்றும் காவல்துறை காட்டும் தீவிரம் வெளிப்படுகிறது.
இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் தவறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசின் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :முக்தார் எந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார்? வழக்குரைஞர் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com