Director Bharathiraja Passes Away: இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது வயோதிகம் காரணமாக இயற்கை எய்தினார்.
Director Bharathiraja Passes Away: இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது வயோதிகம் காரணமாக இயற்கை எய்தினார்.

Published on: June 10, 2026 at 1:42 pm
சென்னை, ஜுன் 10 2026: தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் 84 வயதில் காலமானார். நீண்டநாள் உடல்நலக்குறைவால் ஜூன் 10, 2026 அன்று சென்னை இல்லத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மாநில அரசு முழு அரசியல் மரியாதை வழங்குவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
பாரதிராஜா, 1941 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்தவர். 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தமிழ்த் திரையுலகில் கிராமிய வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைகளால் புதிய பாதையை உருவாக்கினார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கல், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற பல படங்கள் அவரது இயக்கத்தில் வெளியாக சிறந்த வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆறு தேசிய விருதுகள், பல மாநில விருதுகள் மற்றும் 2004 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
அவரது மறைவு செய்தி அறிந்ததும் திரையுலகமும் அரசியல் வட்டாரங்களும் துயரத்தில் ஆழ்ந்தன. நடிகர் சிவகுமார், சூர்யா, இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாரதிராஜா மறைவுக்கு மாநில அரசு முழு அரசியல் மரியாதை வழங்குவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நடிகை மது கன்னத்தில் அறைந்த நானா படேகர்.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com