Telangana Cyber Crime: நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் பிரபாஸ் ஆகியோர் விளம்பரப்படுத்திய சூதாட்ட செயலியை பதிவிறக்கம் செய்து ₹8 லட்சம் இழந்துவிட்டேன் என ஒருவர் தெலுங்கானா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Telangana Cyber Crime: நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் பிரபாஸ் ஆகியோர் விளம்பரப்படுத்திய சூதாட்ட செயலியை பதிவிறக்கம் செய்து ₹8 லட்சம் இழந்துவிட்டேன் என ஒருவர் தெலுங்கானா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Published on: March 25, 2025 at 11:15 am
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 சிறப்பு படக்காட்சியில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, நடிகர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அண்மையில் நடிகர்கள் சூதாட்ட செயலியை பிரபலப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சிலர் அதிகாரப்பூர்வமாக சைபர் க்ரைம் போலீசில் புகார்களும் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ், பாலகிருஷ்ணா மற்றும் கோபி சந்து ஆகியோர் மீது தெலுங்கானா சைபர் கிரைம் போலீசில் ராமராவ் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “நடிகர்கள் பிரபாஸ், பாலகிருஷ்ணா மற்றும் கோபிச்சந்த் ஆகியோர் சூதாட்ட செயலி ஒன்றை பிரபலப்படுத்தினார்கள்; நான் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து ரூபாய் 8 லட்சத்தை இழந்து விட்டேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலை விளம்பரப்படுத்தியதாக ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய் தேவார கொண்டா, ராணா மற்றும் நடிகைகள் பிரணிதா, மஞ்சள் லட்சுமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ஊ சொல்றியா மாமா.. முதலில் தேர்வானவர் சமந்தா இல்லை.. அப்போ யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com