Pushpa the Rise:ஊ சொல்றியா மாமா.. பாடலில் குத்தாட்டம் போட முதலில் தேர்வானவர் நடிகை சமந்தா கிடையாதாம்; இயக்குனர் சுகுமாரின் முதல் தேர்வு யார் தெரியுமா?
Pushpa the Rise:ஊ சொல்றியா மாமா.. பாடலில் குத்தாட்டம் போட முதலில் தேர்வானவர் நடிகை சமந்தா கிடையாதாம்; இயக்குனர் சுகுமாரின் முதல் தேர்வு யார் தெரியுமா?
Published on: March 24, 2025 at 1:52 pm
தெலுங்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் புஷ்பா. இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன்; ரசிகர்களின் மனதில் இடமும் பிடித்தது.
இந்தப் படத்தில் ஹீரோ செம்மர கடத்தலில் ஈடுபடுவார்; இந்தக் கடத்தலை தட்டிக் கேட்கும் ஒரு அதிகாரியாக பகத் பாஸில் நடித்திருப்பார். முதல் பாகம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆக அமைந்தது.
இதை எடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வசூல் ரூபாய் 1500 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.புஷ்பா முதல் பாகத்தில் மிகப்பெரிய ஐட்டம் சாங் ஒன்று இருக்கும். உ சொல்றியா மாமா.. எனத் தொடங்கும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார் நடிகை சமந்தா. இந்தப் பாடலை நடிகை ஆண்ட்ரியா தமிழில் பாடி இருப்பார்.
இதையும் படிங்க Exclusive:சின்னத்தம்பி பட நடிகர்; யார் இவர்? அடையாளம் தெரிகிறதா?
இந்த நிலையில் ஊ சொல்றியா மாமா.. பாடலுக்கு முதலில் தேர்வானவர் நடிகை சமந்தா கிடையாதாம்; நடிகை கெட்டிகா சர்மாவை இயக்குனர் சுகுமார் இந்த பாடலில் ஆடவைக்க முதலில் அணுகினாராம்.
ஆனால் அவர் மறுத்து விடவே இந்த பாடலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் நடிகை சமந்தா. இந்த நிலையில் இப்பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
நடிகை கெட்டிகா சர்மாவும் கவர்ச்சி குத்தாட்டம் போடுவதில் வல்லவர். அண்மையில் இவர் ராபின்ஹூட் என்ற படத்திற்காக ஆதிதா சர்ப்ரைஸ் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.இந்தப் பாடலில் கெட்டிகா ஷர்மாவின் நடனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் பாடலில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க தேடிவந்த ₹200 கோடி; நோ சொன்ன சமந்தா.. மீண்டும் வைரல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com