Chinnathambi actor Marthandan: சின்னத்தம்பி படத்தின் நடிகர், படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய காட்சியில் நடித்தவர்.இதற்கு இவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? சின்னத்தம்பி பட நடிகர் மார்த்தாண்டன் திராவிடன் டைம்ஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டி.
Chinnathambi actor Marthandan: சின்னத்தம்பி படத்தின் நடிகர், படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய காட்சியில் நடித்தவர்.இதற்கு இவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? சின்னத்தம்பி பட நடிகர் மார்த்தாண்டன் திராவிடன் டைம்ஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டி.
Published on: March 23, 2025 at 10:37 am
Updated on: March 23, 2025 at 9:36 pm
நடிகர் பிரபு நடிகை குஷ்பு காம்பினேஷனில் மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் சின்னத்தம்பி. இந்த திரைப்படத்தின் தாக்கம் ரஜினிகாந்தின் மன்னன் திரைப்படத்திலும் அழகாக எதிரொலித்திருக்கும்.
இந்த படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு; இந்தப் படத்தின் கதை களத்திற்கு இதுதான் பிரதானமான காட்சி ஆகும். இந்த காட்சியில் நடித்தவர் தான் நடிகர் மார்த்தாண்டன்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் இவர். திராவிடன் டைம்ஸ் இவரை பேட்டி கண்டது. சினிமாவில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளதாக கூறும் நடிகர் மணிகண்டன், மிகச்சிறந்த ஓவியரும் கூட.
இவர் திராவிடன் டைம்ஸ் ஆசிரியர் ஜேகே உடன் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடி பல இடங்களுக்கு, பல இயக்குனர்களை சந்தித்த அனுபவங்களையும் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பகால ரஜினிகாந்த் குறித்தும் பேசிய நடிகர் மார்த்தாண்டன், அக்காலகட்டத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் கூட தவம் இருந்தார்; நான் எம்மாத்திரம்? என்று பேச்சை தொடங்கிய நடிகர் மார்த்தாண்டன், ” முதல்முறை இயக்குனர் பாலச்சந்தரை சந்தித்தபோது அவரிடம் பேச முயற்சி செய்தேன்; ஆனால் அது நடக்கவில்லை.
ஒரு வழியாக அவரின் உதவியாளரை சந்தித்து என் கையில் இருந்த ஒரு பரிசை நான் அவருக்கு கொடுத்தேன்; அது வேறு ஒன்றும் இல்லை என் கையால் வரைந்த பாலச்சந்தரின் ஓவியம். அந்த ஓவியம் இயக்குனர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால் எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: கொலையா? தற்கொலையா? சி.பி.ஐ இறுதி அறிக்கை தாக்கல்?
அடுத்தும் மனதை தளரவிடாமல் பாலச்சந்தரை சந்திக்க மீண்டும், அவரின் படத்தை ஓவியமாக வரைந்து எடுத்துச் சென்றேன். அப்போது என் கைகளில் ஒரு பரிசுப் பொருள் இருப்பதை பார்த்த இயக்குனர் பாலச்சந்தர், இங்கு வா என்றார். நானும் அவருடன் அவரது வீட்டுக்குள் சென்றேன்; அப்போது இங்கே பார் என ஒரு இடத்தை காட்டினார். அந்த இடத்தில் நான் வரைந்த ஓவியம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
நான் அவரிடம் எப்படி சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்பேன்? எனினும் வந்த விஷயத்தை அவரிடம் சுருக்கமாக சொன்னேன். எனக்கு அவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு வீடு இரு வாசல் என்ற திரைப்படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன் பின்பு தான் எனக்கு சின்னத்தம்பி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சின்னத்தம்பி திரைப்படம் பிரபலமானதால் நானும் பிரபலமடைந்தேன். அதன் பின்னர் பாளையத்து அம்மன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து விட்டேன்” என்றார். மேலும் அக்காலகட்டத்தில் இள வயது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குறித்தும் அவர் திராவிடன் டைம்ஸோடு பகிர்ந்து கொண்டார்.
சின்னத்தம்பி திரைப்படத்தில் நடித்ததற்காக உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் மார்த்தாண்டன், ” அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ₹10 வழங்கப்பட்டதாக கூறினார். நடிகர் மார்த்தாண்டன் மனைவி மற்றும் இரு மகள்களோடு வசித்து வருகிறார். அவரின் ஒரு மகள் அமெரிக்காவிலும் மற்றொரு மகள் சென்னையிலும் வசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து ரேஸில் ஈடுபட ஆசை.. அப்போ சினிமா? அஜித் குமார் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com