Sushant Singh Rajput Death Case: நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலித்தன.
Sushant Singh Rajput Death Case: நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலித்தன.
Published on: March 23, 2025 at 8:35 am
Updated on: March 23, 2025 at 10:03 am
புதுடெல்லி, மார்ச் 23. 2025: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சனிக்கிழமை (மார்ச் 22 2025) செய்திகள் வெளியாகின.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14, 2020 அன்று இறந்து கிடந்தார். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இறுதி அறிக்கை வந்துள்ளது.
மறைந்த நடிகரின் குடும்ப உறுப்பினர்கள் இது ஒரு கொலை வழக்கு என்று நம்புகின்றனர். எனினும், புலனாய்வு அமைப்பின் இறுதி அறிக்கை இது எந்த தவறும் இல்லாமல் நடந்த தற்கொலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ஒருவர் ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில், இது ஒரு கொலை வழக்கு என்பதை நிரூபிக்க எந்த வாய்மொழி அல்லது வேறு ஆதாரமும் இல்லை.
குற்றச்சாட்டை முன்வைத்த நடிகரின் சகோதரியை விசாரிக்கும் நம்பிக்கையில் சிபிஐ இவ்வளவு நேரம் காத்திருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றார்.
மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான அறிவியல் சான்றுகளும் தெளிவாக உள்ளன எனவும் கூறினார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு
ஜூன் 14, 2020 அன்று மும்பையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து கிடந்தார். அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இருப்பினும், அந்த இடத்திலிருந்து எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. இது தற்கொலையா அல்லது கொலையா என்றும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘சில நேரங்களில் ட்ரிங்க்ஸ் அடிப்பேன்’: மனம் திறந்து பேசிய சம்யுக்தா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com