Isreal AirStrike: ஹமாஸ் இயக்கத்தின் டாப் தலைவர்களில் ஒருவரான சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Isreal AirStrike: ஹமாஸ் இயக்கத்தின் டாப் தலைவர்களில் ஒருவரான சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: March 23, 2025 at 8:49 am
Updated on: March 23, 2025 at 10:02 am
ஜெருசலேம், மார்ச் 23 2025: தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23 2025) கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 18 2025) தொடங்கிய இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை அதிகரித்து காணப்படுகின்றன என்கின்றன தகவல்கள்.
இதற்கிடையில், ஹமாஸ் ஆதரவு ஊடகங்கள், வான்வழித் தாக்குதலில் குழுவின் அரசியல் அலுவலக உறுப்பினரான பர்தவீல் கொல்லப்பட்டார் என்றும் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பாக இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஹமாஸ் தலைமையின் ஊடக ஆலோசகர் தாஹர் அல்-நோனோ, தனது பேஸ்புக் பக்கத்தில் பர்தாவீலின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காசா மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 120 பேர் பலி
இரண்டு மாதங்களாக அமைதி நிலவிய பின்னர், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை கைவிட்டதை அடுத்து, காசா மக்கள் மீண்டும் தங்கள் உயிருக்காக தப்பி ஓடத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்றும் (மார்ச் 23 2025) அதிகாலையில் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசா பகுதி முழுவதும் வெடிப்புகள் எதிரொலித்தன, இஸ்ரேலிய விமானங்கள் அந்தப் பகுதிகளில் பல இலக்குகளைத் தாக்கின.
முன்னதாக, 2023 அக்டோபர் 7 ஆம் தேதி காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய சமூகங்கள் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் ஹமாஸில் தாக்குதலை தொடங்கியது. இது தொடர்பாக இஸ்ரேலிய கணக்கெடுப்பின்படி சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் பணயக்கைதிகளாகக் உள்ளனர்.
பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, 49,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் எனவும் மக்களிடம் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :இந்தியாவுடன் நல்ல உறவில் இருக்கிறோம்’; ட்ரம்ப் சுட்டிக்காட்டிய பிரச்சனைகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com