Donald Trump: இந்தியாவுடன் நல்ல உறவில் இருக்கிறோம் என கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சில பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டினார்.
Donald Trump: இந்தியாவுடன் நல்ல உறவில் இருக்கிறோம் என கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சில பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டினார்.
Published on: March 22, 2025 at 9:14 am
இந்தியா உடன் தனக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், இந்திய நாட்டோடு எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அது “உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று” என்பதுதான் என்றார்.
இது குறித்து, அமெரிக்க செய்தி, கருத்து மற்றும் வர்ணனை வலைத்தளமான பிரெய்ட்பார்ட் நியூஸுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது, ஆனால் இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும். அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். மேலும், 2025 ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அவர்கள் நம்மிடம் வசூலிக்கும் அதே வரியை நாங்கள் அவர்களிடம் வசூலிப்போம்” என்றார்.
தொடர்ந்து, சில சமயங்களில் நம்மிடம் அவ்வளவு நட்பாக இருக்க முடியாத நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகத்தில் நம்மை மிக மோசமாக நடத்துகிறது என்றார்.
இதையும் படிங்க : Badar Khan Suri: அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது.. விரைவில் நாடு கடத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com