Mutual Funds மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முதலீடு, பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் பி பி எஃப் முதலீடு ஆகியவை வெவ்வேறு வகையிலானவை. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துடன் ஒப்பிடும்போது ppf மிகவும் பாதுகாப்பான முதலீடு ஆகும்.
Mutual Funds மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முதலீடு, பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் பி பி எஃப் முதலீடு ஆகியவை வெவ்வேறு வகையிலானவை. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துடன் ஒப்பிடும்போது ppf மிகவும் பாதுகாப்பான முதலீடு ஆகும்.
Published on: March 22, 2025 at 9:07 am
இந்திய நிதி அமைச்சகம் ஒவ்வொரு மூன்று மாத காலாண்டின் போதும் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை திருத்தி அமைக்கும். அந்த வகையில் PPF திட்டத்தை பொருத்தமட்டில் தற்போது 7.1% ஆண்டுக்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. மறுபுறம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை எடுத்துக் கொண்டால் இதற்கு எந்த விதமான சான்றளிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் இல்லை.
எனினும் கடந்த காலத்தில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 12 சதவீதத்திற்கும் மேல் வட்டி விகிதத்தை வழங்கியுள்ளன. அந்த வகையில் நாம் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஆண்டுக்கு 12 சதவீத ரிட்டன் கொடுத்துள்ளது என ஒரு கணக்கிற்கு பார்த்துக் கொள்வோம். அந்த வகையில் ஆண்டுக்கு ரூபாய் தொண்ணூத்தி ஐந்து ஆயிரம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்? PPF திட்டத்தைப் பொருத்தமட்டில் ஆண்டுக்கு ரூபாய் 1.50 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால் எஸ் ஐ பி முதலீட்டில் இது போன்ற எந்த ஒரு வரி சலுகையும் இல்லை. இந்த நிலையில் முதலில் எஸ்ஐபி முறையில் ஆண்டுக்கு ரூபாய் 95 ஆயிரம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
எஸ் ஐ பி திட்டத்தில் ரூபாய் 95 ஆயிரம் முதலீடு
ஒரு கணக்கிற்கு எஸ்ஐபி திட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 95 ஆயிரம் முதலீடு செய்வோம் என எடுத்துக் கொள்வோம். ஆண்டுக்கு ரூபாய் 95 ஆயிரம் என்றால் மாத எஸ்.ஐ.பி முதலீடு ₹7,916 ஆகும்.
அந்த வகையில் 15 ஆண்டுகளில் நாம் முதலீடு செய்த தொகை ₹14, 24,880 ஆக இருக்கும்.
இந்த முதலீட்டுக்கு 12 சதவீத ரிட்டர்ன் என நாம் ஒரு கணக்கிற்கு எடுத்துக் கொண்டால் நமக்கு கிடைக்கும் வருவாய் ₹39, 94,224 ஆக தோராயமாக இருக்கும்.
பி பி எஃப் ரிட்டன்
இதுவே பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் எனப்படும் பி பி எஃப் திட்டத்தில் நாம், ஆண்டுக்கு ரூபாய் 95 ஆயிரம் வீதம் முதலீடு செய்தால், நமக்கு கிடைக்கும் ரிட்டன் ₹25,76,533 ஆக இருக்கும். இந்த வருவாய் சான்றளிக்கப்பட்ட உறுதியான ரிட்டன் ஆகும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இதுபோன்று எவ்வித உறுதி வாய்ப்புகளும் இல்லை. இதில் சுவாரசியமாக PPF திட்டம் முதிர்வு பெற 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் இது போன்ற எந்த லாகின் காலமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இல்லை.
பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை; முதலீடுகளுக்கு முன்பு செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.
இதையும் படிங்க FD Rates: ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி.. இந்த வங்கியை நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com