Food: தினமும் காலையில் இட்லி, தோசை என்று ஒரே மாதிரியாக செய்யாமல் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய ஆலு பரோட்டா இப்படி பண்ணுங்க?
Food: தினமும் காலையில் இட்லி, தோசை என்று ஒரே மாதிரியாக செய்யாமல் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய ஆலு பரோட்டா இப்படி பண்ணுங்க?
Published on: March 22, 2025 at 9:49 am
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ருசியான ஆலு பரோட்டா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
கோதுமை மாவு -1கப்
உப்பு – ¼ டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உருளைக்கிழங்கு -3
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஓமம் -1 டீஸ்பூன்
கரம் மசாலா -1 டீஸ்பூன்
மல்லி தூள் -1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசையும் பதத்தில் திரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் மூன்று உருளைக்கிழங்கை அவித்து எடுத்துக் கொள்ளவும். அவித்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு உருளைக்கிழங்கினை கட்டி விழாமல் மாவு போன்று நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், ஓமம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் ஏற்கனவே தயார் செய்து வைத்த சப்பாத்தி மாவிலிருந்து சிறிது மாவினை எடுத்து உருண்டையாக்கி கொள்ளவும்.
மாவின் நடுவில் கிண்ணம் போன்று பள்ளம் ஏற்படுத்திக் கொண்டு ஏற்கனவே தயார் செய்து வைத்த உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்கை இதன் உள் வைத்து மாவினை மூடவும். இந்த உருண்டையை சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்திக்கு உருட்டுவது போல் உருட்டி எடுக்கவும். ஒரு இரும்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடானதும் அதில் சிறிது எண்ணெய், நெய் அல்லது பட்டர் சேர்த்து தடவிக் கொள்ளவும்.
இதையும் படிங்க :குழந்தைகள் விரும்பும் மோமோஸ்; இப்படி செஞ்சு கொடுங்க; சுவை அள்ளும்!
பின்னர் இதில் உருட்டி வைத்த மாவிலை சேர்க்கவும். ஆலு பரோட்டா சூடானதும் இதன் மீது சிறிது பட்டர், எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். ஆலு பரோட்டாவில் ஒரு பகுதி வெந்த பின்னர் மறுபகுதியில் மாற்றி போட்டு வேக விடவும். ஆலு பரோட்டாவின் இரண்டு பகுதியும் வெந்த பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
இதேபோன்று அனைத்து ஆலு பரோட்டாவும் ஒன்றன்பின் ஒன்றாக வேக வைத்து எடுக்கவும் இப்பொழுது சுவையான குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய ஆலு பரோட்டா தயார். இந்த பரோட்டா உடன் புதினா சட்னி கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, தயிர், ரைத்தா மற்றும் ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : கோதுமை மாவு இருக்கா? நார்த் இந்தியன் ஸ்பெஷல் மால்புவா தயார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com