Actress Varalakshmi Sarath Kumar: நடிகை வரலட்சுமி தனது சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் கலங்கி பேசி உள்ளார். இந்த தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Actress Varalakshmi Sarath Kumar: நடிகை வரலட்சுமி தனது சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் கலங்கி பேசி உள்ளார். இந்த தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Published on: March 23, 2025 at 8:58 am
சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவரும் தந்தையைப் போல் சினிமா துறையில் கால் பதித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் கதாநாயகியாக தனது நடிப்பை தொடர்ந்த வரலட்சுமி தற்போது வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் கலக்கி வருகிறார். இவரின் வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் பெண்களுக்கு அவர் ஆலோசனைகளும் வழங்குவார். இந்த நிலையில் போட்டியாளர் ஒருவர் தனக்கு சிறுவயதில் நேர்ந்த பாலியல் பிரச்சனைகள் குறித்து பேசினார்.
இதையும் படிங்க 60 வயதில் மூன்றாம் திருமணத்துக்கு தயாரான அமீர் கான்: கண்கலங்கியபடி காரில் சென்ற ஈரா கான்!
இதை பார்த்து கண்கலங்கிய வரலட்சுமி, ” நானும் சிறு வயதில் இது போன்ற கொடுமைகளை அனுபவித்து உள்ளேன்; எனது தந்தையும் தாயும் தொழிலில் மிக பிஸியாக இருந்தனர். அப்போது என்னை அருகில் இருக்கும் வீடுகளில் விட்டுச் செல்வார்கள்.
அந்த சிறுவயதில் என்னை ஆறு பேர் வரை தொந்தரவு செய்துள்ளனர். பெற்றோருக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குட் டச் பேட் டச் குறித்து சொல்லிக் கொடுங்கள்” என்றார்.
இதையும் படிங்க நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: கொலையா? தற்கொலையா? சி.பி.ஐ இறுதி அறிக்கை தாக்கல்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com