Actor Ajith Kumar: “தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்; பல ஆண்டுகள் கார் ரேஸில் ஈடுபட ஆசை” என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
Actor Ajith Kumar: “தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்; பல ஆண்டுகள் கார் ரேஸில் ஈடுபட ஆசை” என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
Published on: March 23, 2025 at 10:21 am
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித்குமார். இவரின் தரிசனத்திற்காக அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் அஜித் குமாரோ கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அஜித் குமாருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்து கௌரவித்தது. இந்த விருது தொடர்பாக பேசிய நடிகர் அஜித்குமார், இந்த தருணத்தில் தனது தந்தை இல்லை என்பதை எண்ணி வருந்துகிறேன் என தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில் நடிகர் அஜித்குமார் படங்களில் நடிப்பதை தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் துபாயில் நடந்த கார் ரேஸில், அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்பெயினில் கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். முன்னதாக துபாய் போட்டியின் கார் ரேஸ் பயிற்சியின் போதும் ஸ்பெயினில் நடந்த கார் பயிற்சியின் போதும் நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்த நிலையில் தான் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட ஆசை இருப்பதாக நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் அஜித்குமார், ” தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட விரும்புகிறேன்; கார் ரேஸ் போட்டிகளில் மிகவும் ரசித்து கலந்து கொள்கிறேன். கார் ரேசராகவும் ஒரு அணியின் உரிமையாளராகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
பல ஆண்டுகள் கார் ரேஸில் ஈடுபட ஆசை” என தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்து அஜித் குமாரின் நடிப்பில் குட் பேட் அக்லீ என்ற படம் வெளியாக உள்ளது. அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் இந்த படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. இன்று வரை அஜித்குமாரின் ரசிகர்கள் இதனை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: கொலையா? தற்கொலையா? சி.பி.ஐ இறுதி அறிக்கை தாக்கல்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com